அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

மோடி பிரதமராக முடியுமா? - 1: காங்கிரசும் பா.ஜ.கவும் ஒரு ஒப்பீடு!


 

 



காங்கிரசுக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை நாம் மனங்கொள்ள வேண்டும். கடந்த முப்பதாண்டுகளில் காங்கிரஸ் மிகப் பெரிய பின்னடைவுகளுக்கு உள்ளாகிய போதிலும்
ஒப்பீட்டளவில் பா.ஜ.க வைக் காட்டிலும்புவியியல் அடிப்படையில் மட்டுமின்றி சாதி, வர்க்க அடிப்படையிலும் அது பரந்துபட்ட வேர்களுள்ள ஒரு கட்சி. பா.ஜ.கவின் வேர்பிடிப்பு மேற்கு மத்திய இந்தியப் பரப்புகளிலும், உயர் சாதி மற்றும் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்திடமுந்தான். தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மத்தியில் அவர்கள் கடுமையாகச்ச் செயல்பட்டபோதும் ஒரு நிரந்தரப் பிடிப்பை அவர்களிடம் பா.ஜ.க ஏற்படுத்தியதில்லை. இம்முறை குஜராத்திலேயே பழங்குடியினர் மத்தியில் பா.ஜ.க தன் செல்வாக்கை இழந்து நிற்பதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க பெற்ற அதிக பட்ச வாக்கு 25.6 சதம்தான். காங்கிரஸ் பெற்ற குறைந்த பட்ச வாக்கு 25.8 சதம் என்பது நினைவிற்குரியது.

எண்பதுகளுக்கு முன்புவரை (நெருக்கடி காலத்தை ஒட்டிய ஒரு சிறிய இடை வெளி தவிர்த்து) காங்கிரஸ் சராசரியாக 4 சத வாக்குகள் பெற்று 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்தது. அப்போதெல்லாம் பா.ஜ.கவின் மிக அதிக பட்ச வாக்கு வீதம் 7 முதல் 10 சதம் வரைதான் இருந்து வந்தது.

மாநிலக் கட்சிகள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் நிலை 90 களுக்குப் பின் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சத வாக்குகளை அவை பெறுகின்றன. காங்கிரசும் பாஜகவும் சேர்ந்து 50 சத வாக்குகளைப் பெறுகின்றன. மீதியுள்ளவை இடது மற்றும் உதிரிக் கட்சிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

மொத்தம் 50 சத வாக்குகளைப் பெறும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவில் எது 30 சதத்திற்கு மேல் பெறுகிறதோ அது மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது என்பதுதான் இன்றைய எதார்த்தம். சென்ற தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்குகள் வெறும் 18.8 சதம். எனவே அது இம்முறை கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் மேலும் 12 சதம் வரை வாக்குகள் பெற வேண்டும். கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இன்றைய நிலையில் பா.ஜ.க முந்தைய தேர்தலைக் காட்டிலும் 12 சத வாக்குகளைக் கூடுதலாகப் பெற வாய்ப்பில்லை. தேர்தலுக்கு முந்தைய அதன் கூட்டணி இன்று மிகவும் பலவீனப்பட்டுள்ளது. இன்று அதன் கூட்டணிக் கட்சிகள் அகாலி தளமும் சிவசேனாவும் மட்டுந்தான். ஒரு காலத்தில் 23 கட்சிகள் அதனுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி அமைப்பிலும் பா.ஜ.கவிற்குச் சாதகமற்ற நிலையே உள்ளது. முக்கிய மாநிலக் கட்சிகளான திருனாமுல் காங்கிரஸ், மதச் சார்பர்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றில் அ.தி.மு.க மட்டுமே தேர்தலுக்குப் பின் பா.ஜ.க பக்கம் சாய்வதற்கு வாய்ப்புள்ளது. திருனாமுல் கூட அந்த பக்கம் போகப் போவதில்லை.

பா.ஜ.கவின் ஒரே பலம் காங்கிரசின் பலவீனம்தான். அதன் தவறான ஆளுகைகள், ஊழல்கள்தான். ஆனால் இதன் மூலம் பா.ஜ.கவிற்குக் கிடைக்க உள்ள பயன், யெடியூரப்பா மற்றும் நிதிஷ் குமாரின் பிரிவால் ஏற்படும் இழப்பால் ஈடுகட்டப்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சி அடுத்த பக்கம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக