அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

உலக சுற்றுசூழல் தினம்!



ஜூன் ஐந்து உலக சுற்றுசூழல் தினம் உலகெங்கிலும் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது
. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு,  இதனையொட்டி இவ்வருட சூழல் தினம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய 100 கோடி மரங்கள் நடத்திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 25 கோடி மரங்களை நட மெக்சிக்கோ முன்வந்துள்ளது.
தோப்புதுறையில் சுற்றுசூழல் பாதுகாப்பு:  
MSF-2005 பசுமை தூய்மை என்ற திட்டத்தின் மூலம் தோப்புத்துறையின் சுற்றுசூழலை பாதுகாக்க முதற்கட்டமாக நூறு மரக்கன்றுகளை நமதூரின் தெருக்களில் பரவலாக 2002ஆம் ஆண்டு நடப்பட்டது, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் மரக்கன்றுகளை மக்கள் ஆர்வமாக வளர்த்தனர், இதனால் நமதூரின் தெருக்களில் சுகாதாரமான காற்றும், நிழல்நிறைந்தும் காணபடுகிறது    எல்லபுகழும் இறைவனுக்கே...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக