அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பிரகாசமான வாய்ப்புகளை வழங்கும் கண் மருத்துவப் படிப்புகள்!


உலகில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக் கொண்டிருக்கிறது நமது தேசம். சுமார் 120 கோடி மக்கள்தொகை கொண்ட நம் தேசத்தில் பார்வைக்குறைபாடு உடைய மக்கள் சுமார் 42 சதவீதம். இவர்களில் பலரும் தங்களுக்கு அப்படி ஒரு குறைபாடு இருப்பதையே தெரியாதவர்களாக, இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கும் உண்மை.


அதேநேரத்தில், இந்தக் குறையை கண்டறிந்து தேவையான சேவையை வழங்கி, கண் பார்வையை மீட்டுத்தரக் கூடிய அல்லது கண் பார்வையை திருத்தியமைத்துக் கொள்ளக்கூடிய, அல்லது இருக்கின்ற பார்வையை தக்க்வைத்துக் கொள்ள்க்கூடிய சேவையை வழங்கும் மனித வளம் தேவையான அளவு இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

அந்த வகையில் மனிதனின் கண் பார்வையைக் காத்திடும் பணியில் கண் மருத்துவத்துறையில் கல்வி பயில்வதன் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரை மருத்துவத் துறையில் வாய்ப்பு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும். அதுபோல கடைசி மனிதனுக்கு கண் உள்ளவரை கண் மருத்துவத்துறையில் வாய்ப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதிலும் அறிவியல், தகவல், தொழில் நுட்பம் என்று மனிதனின் கற்றுக்கொள்ளும் செயல்பாட்டிலும், மனிதனின் கண்கள் சுமார் 80 சதவீதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில், கண் மருத்துவத்தில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றது என்பதில் சந்தேகமேயில்லை. குறிப்பாக, கேப்பிட்டேஷன் ஃபீ அதாவது நன்கொடை ஏதுமேயில்லாமல், நமது மதிப்பெண்களை மட்டுமே ஒரு விசிட்டிங் கார்டாகக் கொண்டு, அதனை முக்கியமான அடையாளமாகக் கொண்டு தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், ராஜஸ்தானின், பிலானியில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் வழங்கும் டிப்ளமோ, டிகிரி, போஸ்ட் கிராஜுவேஷன் படிப்பதற்கான வாய்ப்புகள் இந்த தமிழகத்தில் கிடைக்கின்றது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியே ஆகும்.

சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு அங்கமான எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரி மற்றும் தி சங்கர நேத்ராலயா அகாடெமி கண் மருத்துவத்துறையில் பல்வேறு டிப்ளமோ, டிகிரி மற்றும் பட்டமேற்படிப்புகளை வழங்குகிறது.

பி.எஸ். ஆப்டோமெட்ரி (B S - OPTOMETRY):

இது 4 வருட பட்டப்படிப்பாகும். ப்ளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் / கணினி அறிவியல் படித்தவர்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்தப் படிப்பினை படித்தவர்கள் கண் மருத்துவமனைகளில் ஆப்டோமெட்ரிஸ்ட்களாகவும், ரெஃப்ராக்‌ஷனிஸ்ட்களாகவும்,கண் மருத்துவமனைகளில் பல்வேறு உட்பிரிவுகளில் வல்லுநர்களாகவும் பணியாற்றுகிறார்கள். மேலும், எம்.ஃபில் மற்றும் பி.எச்டி முடித்தவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வல்லுநர்களாகவும், கல்விப்பணியிலும் சிறப்பாக சேவை செய்து வருகிறார்கள். பலர் சொந்தமாக ஆப்டிகல்ஸ் மற்றும் கான்டாக்ட் லென்ஸ் மையங்கள் நடத்தி வருகின்றார்கள். இதற்க்கான மாணவர்கள் அனுமதியை பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியே நடத்துகிறது.

மேலும் விவரங்களை அறிய நாடவேண்டிய வலைத்தளம் http://www.eso.sankaranethralaya.org 

அட்மிஷன் மற்றும் விண்ணப்பங்களுக்கு www.bits-pilani.ac.in வலைத்தளத்தை நாடலாம். முக்கிய குறிப்பு, இந்தப் படிப்புக்கு நீங்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.

பி.எஸ்சி மெடிக்கல் லேப் டெக்னாலஜி (BSc MEDICAL LAB TECHNOLOGY)

இது தி தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கும் மூன்று வருட பட்ட படிப்பாகும். ப்ளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்தப் படிப்பினை படித்தவர்கள் மருத்துவமனைகளில் மெடிக்கல் லேப் டெக்னீஷியன்களாகவும், மருந்து கம்பெனிகளில் மெடிக்கல் லேப் டெக்னீஷியன்களாகவும் பணியாற்றுகிறார்கள். மேலும், பிஎஸ்.சி. முடித்தவர்கள் எம்.எஸ்.எல்.டி மற்றும் பி.எச்டி படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அவற்றை முடித்தவர்கள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களில் அறிவியலறிஞர்களாகவும், வல்லுநர்களாகவும், பல்கலைக்கழகங்களில் கல்விப்பணி மற்றும் ஆராய்ச்சிகளில் சிறப்பாக சேவை செய்து வருகிறார்கள்.

டிப்ளமோ இன் ஆப்தால்மிக் நர்சிங் அஸிஸ்டெண்ட் (DIPLOMA IN OPHTHALMIC NURSING ASSISTANCE):

தி தமிழ் நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கும் இரண்டு வருட பட்டய படிப்பாகும். ப்ளஸ் 2 வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப் படிப்பினை படித்தவர்கள் கண் மருத்துவமனைகளில் கண் மருத்துவ உதவியாளர்களாகவும், வார்டுகளிலும் ஆபரேஷன் தியேட்டர்களிலும் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள். இந்தப் படிப்பினை முடித்தவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள கண் மருத்துவ மனைகளிலும், சிலர் வெளிநாடுகளில் உள்ள கண் மருத்துவமனைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.

டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி மற்றும் அனஸ்தீசியா (DIPLOMA IN OPERATION THEATRE TECHNOLOGY AND ANESTHESIA):

தி தமிழ் நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கும் இரண்டு வருட பட்டய படிப்பாகும். ப்ளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்தப் படிப்பினை படித்தவர்கள் கண் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது பொதுவாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஆபரேஷன் தியேட்டர்களில் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்களாகவும், ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்களாகவும், மயக்க மருந்தியல் நிபுணர்களுக்கு உதவியாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள். இந்த படிப்பினை முடித்தவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள கண் மருத்துவ மனைகளிலும், சிலர் வெளிநாடுகளில் உள்ள கண் மருத்துவமனைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.

டிப்ளமோ இன் ரெஃப்ராக்‌ஷன் அண்ட் டிஸ்பென்சிங் (DIPLOMA IN REFRACTION AND DISPENSING):

தி தமிழ் நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கும் இரண்டு வருட பட்டய படிப்பாகும். ப்ளஸ் 2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் மதிப்பெண், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பினை படித்தவர்கள் கண் மருத்துவமனைகளில் ரெஃப்ராக்‌ஷனிஸ்ட்களாகவும், கண் மருத்துவமனைகளில் பல்வேறு உட்பிரிவுகளில் உதவியாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள். சங்கர நேத்ராலயாவில் இந்த படிப்பினை படிப்பவர்கள் மேலும் இரண்டு வருடங்கள் படித்து ஆப்டோமெட்ரிஸ்ட்களாக முன்னேறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. கண்ணாடிக்கடைகளில் உதவியாளர்களாகவும், கஸ்டமர் ரிலேஷன் அதிகாரிகளாகவும் பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது.

மேற்குறித்த அனைத்து படிப்புகளுக்கும் ப்ளஸ் 2 படித்து விட்டு எதிர்காலம் குறித்த கேள்விகளோடு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். 

மேலும் விவரங்களுக்கு www.thesnacademy.ac.in  என்ற வலைத்தளத்தையோ அல்லது mahali@snmail.org  என்கிற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

சங்கர நேத்ராலயா அகாடெமியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இரண்டு வருட பட்ட மேற்படிப்பான எம்.பி.ஏ ஹாஸ்பிடல் அண்ட் ஹெல்த் சிஸ்டம்ஸ் மேனேஜ்மெண்ட் (MBA HOSPITAL AND HEALTH SYSTEMS MANAGEMENT) படித்து விட்டு மருத்துவமனைகளில் நிர்வாகதுறைகளில் பணியாற்றுவதற்க்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

மேலும், மருத்துவ மனைகளில் பணியாற்றுபவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்க்காகவும், தற்போதைய வளர்ச்சிக்கேற்றவாறு தங்களது வேலை மற்றும் தொழிலை மேம்படுத்திக் கொள்வதற்கென வார இறுதி நாட்களில் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வகையில் மூன்று மாத சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் இன் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் Certificate Course in Hospital Management  (சனிக்கிழமை பிற்பகல் வகுப்புகள்), மற்றும் ஒரு வருட எக்ஸிக்யூட்டிவ் டிப்ளமோ இன் ஹெல்த் சிஸ்டம்ஸ் மேனேஜ்மெண்ட் Executive Diploma in Health Systems Management (ஞாயிற்றுக்கிழமை முழு நாள் வகுப்புகள்)மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த வகுப்புகளில் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தும் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்று பலனடைந்துள்ளனர். இது வரை மூன்று குழுக்கள் இந்த படிப்புகளை முடித்துள்ளனர்.

நம் நாட்டில் கண் மருத்துவம் பற்றிய அடிப்படை விஷய ஞானம் இல்லாமல், கண்ணாடிக்கடைகளில் பணியாற்றுகிறவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது சேவையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "டிஸ்டன்ஸ் லெர்னிங் ப்ரோக்ராம் இன் ஆப்டிக்கல் டிஸ்பென்சிங்" Distance Learning Program in Optical Dispensing என்ற கோர்ஸ் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக நடைபெறுகிறது.

அந்த வகையில் பார்வையிழப்பு என்னும் பிரச்னைக்கு எதிராகச் செயல்படுவதற்க்கான ஒரு படையினை தயார் செய்யும் வகையில் கண் மருத்துவம் சார்ந்த படிப்புகள் ஒரு வலிமையான பாரதத்தினை உருவாக்க முனைந்துள்ளது என்பது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பு மட்டுமல்லாது சுய தொழில் வாய்ப்புக்கும் வழி வகுத்துத் தருகிறது என்பது உண்மை.

தி சங்கர நேத்ராலயா அகாடெமி வரும் மே 18, 2013 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 12.30 வரை இலவச கல்வி ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்துள்ளது. முகாம் நடைபெறும் இடம்: தி சங்கர நேத்ராலயா அகாடெமி, 9 வானகரம் - அம்பத்தூர் ரோடு, அயனம்பாக்கம், சென்னை 600 095. - தொடர்புகொள்ள - 97104 85295 / 98406 55405 . முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

- அ.போ.இருங்கோவேள், மருத்துவ சமூகவியலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக