அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பி.இ. விண்ணப்பங்கள் மே 4ம் தேதி முதல் விநியோகம்:கவுன்சிலிங் ஜூன் 21

பி.இ. படிப்புக்கான சேர்க்கை நடவடிக்கைகள் வருகிற 4ம் தேதி முதல் தொடங்குவதாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் காளிராஜ் தெரிவித்தார். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



பிளஸ் 2 தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண்கள் தொகுக்கும் பணி வேகமாக நடந்துவருகிறது. மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது, " பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்பு, மே, 3ம் தேதி வெளியிடப்படும். மறுநாள், 4ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 59 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ளன. எனவே, மாணவ, மாணவியருக்குத் தேவையான அளவில், 2 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்களை அச்சடித்து உள்ளோம். விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவும், மே, 20ம் தேதி கடைசி நாள். அன்று மாலைக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு நடக்கும் தேதி விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

இந்தநிலையில், பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், நேற்றிரவு வெளியிட்டார்.

அதன் விவரம்:

* விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13

* விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13

* விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13

* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13

* "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13

* "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13

* மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13

* கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13

விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் www.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக