அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சுதந்திரபோராட்ட தியாகிக்கு மமக பொதுச்செயலாளர் வாழ்த்து!

தோப்புதுறைக்கு அருகே இயற்கை எழில் சூழ்ந்த தேத்தாகுடி கிராமத்தில் ஆர்ப்பாட்டமின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார் அந்த தியாகி!
அவர்பெயர் கணேசன், வயது 90! இவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில்(INA) ராணுவ வீரராக பணியாற்றியவர்
. தன்னுடைய 13-வது வயதில் மலேசியாவிற்கு சென்றவர், 18-வயதில் சிங்கப்பூருக்கு சென்றார், அப்போது ஐரோப்பாவிலிருந்து நீர்மூழ்கி கப்பல் வழியே சிங்கப்பூருக்கு நேதாஜி வந்தபோது, சிங்கப்பூரில் வாழ்ந்த இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் நேதாஜிக்கு வரவேற்ப்பு கொடுத்தார்கள்.

அப்போது கணேசன் அவர்களும் அப்படையில் இணைந்து ராணுவ பயிற்சியை பெற்றார்.பயிற்சி பெற்ற ராணுவத்தினர்  சிங்கப்பூரிலிருந்து மலேசியா வழியாக தாய்லாந்தை கடந்து ரயில் வழியாக பர்மாவுக்கு வந்து சேர்ந்தானர்.

நேதாஜியின் உத்தரவுபடி ஒன்னரைலட்சம் பேர்கொண்ட படை கிழக்கிந்தியவின் மணிப்பூர் மாநிலத்தை தாக்கியது. அந்த படையில் கணேசன் அவர்களும் இடம்பெற்றிருந்தார்.
ஆங்கிலேயர்களுக்கும், இவர்களுக்கும் கடும் சண்டை மூண்டது. எதிர்பாராதவிதமாக இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பானின்மீது அணுகுண்டுகளை வீசியதால் நிலைமை தலைகீழாக மாறியது. நேதாஜிக்கு ஆதரவளித்த ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாடுகள் இரண்டாம் உலகப்போரில் தோல்வியடைந்தன.

இதனால் இந்திய தேசிய ராணுவத்துக்கு வந்து சேரவேண்டிய ஆயுதங்கள் தடைப்பட்டன. இதை பயண்படுத்தி ஆங்கிலேயர்கள் நேதாஜியின் படையை வெற்றிகொண்டனர். வேறு வழியின்றி நேதாஜியின் ராணுவமும் சரணடைந்தது. சரணடைதவர்களில் தியாகி கணேசனும் ஒருவர். இவர்மீதான வழக்குகள் ஆங்கிலேய நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு போர் கைதி என்ற அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்க பட்டது.

விடுதலையான கணேசன் தனது சொந்த ஊரான செம்போடையில் தங்கிவிட்டார். தற்போது தேத்தாகுடியில் முப்பத்தைந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள தனது தோட்டத்தில் குடும்பத்தோடு அமைதியாக பொழுதை கழிக்கிறார். அவரது ஒருமகன் பெயர் தனபால். இவர் ஒரு முனைவர் படிப்பு முடித்தவர். நேதாஜியின் ராணுவத்தின் வாரிசுகள் பேரவையின் தமிழ்நாடு மாநில துணைத்தலைராக பணியாற்றுகிறார்.

அவரது இன்னொருமகன் தான் வேதரண்ய வட்டத்தில் புகழ்பெற்று திகழும் டாக்டர்,வி.ஜி.சுப்ரமணியன்(VGS) ஆவார். தற்போது செம்போடையில் நாகை, திருவாருறுக்கு இணையான ஒரு மருத்துவமனையை கட்டி கிராம மக்களுக்கு தொண்டற்றிவருகிறார் அந்த மருத்துவமனையின் பெயர் நேதாஜி!

14.09.2013 அன்று காலை மனிதநேயமக்கள் கட்சியின் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தியாகி கணேசன் அவர்கள் இல்லத்துக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார். அப்போது அவரது மகன்கள் டாக்டர்.வி.ஜி.எஸ், தனபாலன், மமக நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் மன்சூர், வேதை ஒன்றிய தமுமுக செயலாளர் அலி, நகர நிர்வாகி ஜலால் என்ற அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.

மா, முந்திரி தோப்புகள் சூழ, நெல் வயல்களுடன் காட்சியளித்த அந்த தோட்டத்தில் நேதாஜி படையினரின் அனுபவங்களை தியாகி கணேசன் அவர்கள் மமக பொது செயலாளருடன் பகிர்ந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக