அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

அரசு பன்நோக்கு உயர் மருத்துவமனையில் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகள்!



அரசு பன்நோக்கு உயர் மருத்துவமனையில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவ– மாணவிகள் இந்தாண்டு சேர்க்கப்படுகிறார்கள் என்று மருத்துவ கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய
மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி, "அரசு பன்நோக்கு மருத்துவமனையில் 4 டிப்ளமோ படிப்புகளும் 12 சான்றிதழ் படிப்புகளும் இந்தாண்டு தொடங்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பம் ஆகஸ்டு மாதம் விநியோகிக்கப்படும். மொத்தம் 347 மாணவ–மாணவிகள் சேர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது. இவை வருட படிப்புகளாகும். பிளஸ்2 கல்வித் தகுதியாகும்.

மெடிசன் ரிக்கார்டு டெக்னாலஜி, டிப்ளமோ மெடிக்கல் லேபரெட்டரி டெக்னாலஜி, டிப்ளமோ ரேடியோ டெக்னாலஜி, டிப்ளமோ லேப் மற்றும் டைகனஸ் டெக்னாலஜி ஆகிய டிப்ளமோ படிப்புகளும், இ.சி.ஜி. ஆபரேஷன் தியேட்டர், டயாலிசீஸ், கார்டியோ சோனாகிராம் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி பம்ப் டெக்னாலஜி, உள்ளிட்ட 14 சான்றிதழ் படிப்புகள் விரைவில் தொடங்கப்படும். இதற்கான அறிவிக்கை வெளியிடப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக