பாலஸ்தீனம் தனி நாடு - ஐ.நா.ஓட்டெடுப்பு வெற்றி!

பாலஸ்தீனம் தனி நாடு - ஐ.நா.ஓட்டெடுப்பு வெற்றி!
பாலஸ்தீனம் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற நேற்று ஐ.நா. வில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் பாலஸ்த்தீனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.


பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தொடர்ந்து,  பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் யாசர் அராபத் தன் மரணத்திற்கு முன் பெரும் முயற்சி மேற்கொண்டார்.
இந்த நிலையில் தனி நாடு என்ற ஐ.நா.வின் அங்கீகாரத்திற்கான ஒட்டெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது
மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 138 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, உ ள்ளிட்ட 9 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன. இந்த வெற்றியின் மூலம் பாலஸ்தினத்துக்கு ஐ.நா. சபையின் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சிறந்த மனித மூலதனத்தைக் கொண்ட நாடுகள் வரிசையில் மலேசியா



பெட்டாலிங் ஜெயா, 28 நவம்பர்: உலகிலேயே அதிக நேரம் வேலை செய்யும் மனித மூலதனத்தை மலேசியா கொண்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 90% விழுக்காட்டினர் விடுமுறை காலங்களிலும் வேலை செய்வதாக அந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

பஸ் ஓட்டுநர் வேலை நிறுத்தம் சட்டவிரோதம்-அமைச்சர் டான்


எஸ்எம்ஆர்டி பஸ் ஓட்டுநர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலைக்கு வராமல் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டது சட்டவிரோத வேலை நிறுத்தம் என்று அரசாங் கம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தற்காலிக மனித வள அமைச்சர் டான் சுவான் ஜின் நேற்றுக் கூறினார்.
“அவர்களின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. சட்டவிரோத வேலை நிறுத்தம் தொடர்பில் போலிஸ் புலன் விசாரணை நடக்கிறது,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய மருத்துவ படிப்பு : சென்னையில் தொடக்கம்

சென்னை : புதிய மருத்துவப் படிப்பினை சென்னை மருத்துவ கல்லூரி தொடங்க உள்ளது.

சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் புதிதாக மருத்துவம் சார்ந்த படிப்பினை தொடங்க இந்திய மருத்துவக் குழு அனுமதித்துள்ளது. இது பேச்சு மற்றும் காது குறைபாடினையுடையவர்களைப் பரிசோதனை செய்யும் பட்டப்படிப்பாகும். இந்த படிப்பின் கால அளவு நான்கு வருடமாகும்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பர்தா அணிந்து உரை!!!

Sumaiya Karim, wearing hijab speaks in British Parliamentபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து உரையாற்றிய மாணவி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

பிரிட்டிஷ் நாடு தேர்தல் ஜனநாயகத்தின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டில், மாணவர்கள், இளைஞர்களிடையே ஜனநாயக ஆர்வத்தைத் தூண்டவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில்  இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து உரையாற்றவும்  தேர்ந்தெடுக்கப்படும் சில இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதுண்டு.

மத்திய அரசுக்கு கொள்கை பக்கவாதம்


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடுகளை எதிர்த்து 1 கோடி துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பரப்புரை தொடங்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி முழுக்க மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் தொடங்கி கிராமங்கள் தோறும் இப்பரப்புரை நடக்கிறது.

நம்பிக்கையாளர் முர்ஸிக்கும் ஆயுதம் அளித்த ஈரானுக்கும் நன்றி : ஹமாஸ்

காஸா : பலஸ்தீன சுயாட்சி பகுதியான காஸாவில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள சூழலில் காஸாவை ஆளும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை: ரிசர்வ் பேங்க் கவர்னர்

இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் பேங்க்கின்  ஆளுநர் டி.சுப்பாராவ் செய்தியாளர்களிடம் "இந்தியாவில், இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை" என்று
இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் பேங்க்கின்  ஆளுநர் டி.சுப்பாராவ் செய்தியாளர்களிடம் "இந்தியாவில், இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 10 நாட்களாக அமெரிக்க அடிமை இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள குடியிருப்புகளை நோக்கி 500 க்கும் அதிகமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி குழந்தைகளும், பெண்களும் மட்டுமே 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி மிரட்டல்... விவாதங்கள்

'துப்பாக்கி’ திரைப்படத்தில் முஸ்லிம் விரோதக் கருத்துக்கள் இடம்பெற்று இருப்பதாகப் போர்க்கொடி தூக்கிய முஸ்லிம் கூட்டமைப்பினரை ஓட்டலில் சந்தித்தது படக்குழு. தாணு, முருகதாஸ், சந்திரசேகரன் ஆகியோருடன் 24 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அந்தக்கூட்டம், ஏகத்துக்கு சூட்டைக் கிளப்பியது. உள்ளே நடந்த விஷயங்களை பலரிடம் பேசி விசாரித்தபோது கிடைத்த தகவல் இது.

துப்பாக்கி: கொந்தளிப்பும் மன்னிப்பும்

தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து, முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டொரு காட்சிகளுக்குள்ளே தமிழகம் முழுவதிலும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு உண்டானது.
இப்படத்தைத் தடை செய்தாக வேண்டும் என்று நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தமுமுக தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்புகள் துருதுருத்தன. படம் பற்றிய சர்ச்சை "விஸ்வரூபம்' எடுத்துக்கொண்டே வந்ததால் தமுமுக தலைமை, திரைப்படத்தைப் பார்த்து

தோப்புத்துறையில் இந்துக்களின் உல்லம் கவர்ந்த தமுமுக!

      பஹ்ரைனில் கடந்த வாரம் நடந்த குண்டுவெடிப்பில் தோப்புத்துறை தெற்கு தெருவை சேர்ந்த திரு.திருநாவுக்கரசு என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார், இவருக்கு தோப்புத்துறை, கள்ளிமேடு, வேதாரண்யம் ஆகிய ஊர்களில் உறவினர்கள் உள்ளனர்,

திருபூண்டியில் விபத்து

    நாகை மாவட்டம் திருப்பூண்டியைச் சேர்ந்த பெண்கள், ஒரு தனியார் பேருந்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஆலியூர் சென்றிருந்தனர். திருமணம் முடிந்து திரும்பிய வழியில் காமேஸ்வரம் என்ற ஊர் வழியாக வந்துகொண்டிருந்தபோது பேருந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது குடி போதையுடன் டிரைவர் வண்