குளிர்பானங்கள் நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன! – ஆய்வில் தகவல்

னித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (சாஃப்ட் ட்ரிங்க்ஸ்) நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ் க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டன. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது.
ஒரு கப் குளிர்பானத்தில் எட்டு ட்யூஸ்பூன் சர்க்கரை அடங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மனித உடலில் சாதாரணமாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவை விட அதிகமாகும். உடல் பருமனுக்கு காரணம் குளிர்பானங்கள்தாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை திரவ நிலையில் உடலுக்குள் சென்றால் விரைவாக உடலுக்குள் கரைந்து பெரிய அளவில் கலோரி ஒன்றிணைந்து உடலுக்குள் நுழைவதற்கு காரணமாகிறது. ஆகையால் பெரும்பாலோருக்கு டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட காரணமாகிறது.
உலக மக்களின் 20 சதவீதம் பேரும் உடல் பருமனாக உள்ளார்கள். அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் குளிர்பானங்களின் பயன்பாடு அதிகமாகும். சீனர்கள்தாம் குறைந்த அளவில் சர்க்கரையை உபயோகிக்கின்றனர். தினமும் ஏழு ஸ்பூன் சர்க்கரையை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக