அமெரிக்க உளவு விமானத்தை சிறை பிடித்தது ஈரான்

அமெரிக்காவின் மற்றுமொரு ஆளில்லா உளவு விமானத்தை (Drone) ஈரான் சிறை பிடித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று இத்தகவலை வெளியிட்டுள்ள ஈரான் நாட்டின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பாரசீக வளைகுடாவில் ஈரானின் எல்லையில் நுழைந்த ஆளில்லா உளவு விமானத்தைப் பிடித்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது.
\ஈரானிய கடற்படையின் தலைவர்  அலீ ஃபதாவி இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.  "ஆளில்லா அமெரிக்க உளவு விமானம் ஒன்று உளவறிக் கருவியுடன் தகவல்களை கடந்த மூன்று நாள்களாக பாரசீக வளைகுடாவில் சேகரித்துக் கொண்டிருந்தது. ஈரானிய எல்லையில் அதனை ஈரானிய கடற்படையின் வானியல் தடுப்புப் பிரிவு கைப்பற்றியது" என்றார் ஃபதாவி "இத்தகைய உளவு விமானங்கள் பெரும் போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படுபவை" என்றார் அவர்.

கடந்த இரண்டாண்டுகளில் ஈரான் கைப்பற்றியுள்ள மூன்றாவது அமெரிக்க விமானம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

பஹ்ரைன் கடற்பகுதியில் முகாமிட்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் அணி இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக