அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

’பக்ரீத்’: ஒட்டகம் வெட்டப்படுகிறதா என கண்காணிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட உரிய வசதிகள் செய்துதரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஒட்டகம் வெட்டுவதற்கு விதிக்கபட்ட தடை தொடரும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. மேலும், ஒட்டகங்களை வெட்டுவதற்கு உரிய இறைச்சி கூடங்கள் தமிழகத்தில் இல்லை என்பதால், ஒட்டகங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது. இந்நிலையில், ஒட்டகம் வெட்ட உரிய வசதிகள் செய்துதரக் கோரி இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இந்த மனுவினைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், ஒட்டகம் வெட்டப்படுகிறதா என கண்காணிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக