அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

MSF – 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா! தயாராகிறது தோப்புத்துறை!!

 
தோப்புத்துறையின் முகத்தை மாற்றியமைத்த சேவைஇயக்கமான முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) அடுத்தாண்டு வெள்ளிவிழாவை கொண்டாட இருக்கிறது.                    

கல்வி, விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம், சுற்றுசூழல்பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பரந்து விரிந்த கொள்கைகளோடு கடந்த
24 ஆண்டு காலமாக தொடர்ந்து இயங்கி வரும் MSF அமைப்பு
வெள்ளிவிழாவை நோக்கி நடை பயிலத் தொடங்கியிருக்கிறது.

அது குறித்து முதல் நிலை ஆலோசனைக் கூட்டம் தோப்புத்துறை லெப்பை அப்பா பள்ளிவாசலில் நடைபெற்றது.


அடுத்தாண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடுதல், போட்டிகள் நடத்துதல் என விழாக்கள் நடைபெற உள்ளது. 
    
உச்சகட்டமாக மே 16,17, தேதிகளில் பெண்கள் மாநாடு, மற்றும் வெள்ளிவிழா பொதுகூட்டம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

பல்வேறு படைப்புகளுடன் கூடிய வெள்ளிவிழாமலர் தயாரிக்கப்பட உள்ளது. Thopputhurainews.com இணையதளம் நவீனபடுத்தப்பட உள்ளது.
     
மிக முக்கியமாக ஆவணப்படம் தயாரிக்கப்பட உள்ளது.தோப்புத்துறையின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் குறித்த அபூர்வ தகவல்களுடன் பெறும் பொருட்செலவில் இதற்கான பணிகள் தொங்கப்பட உள்ளது.

இதற்காக துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, அமீரகம், சவுதி அரேபியா நாடுகளுக்கான பிரநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மாநாட்டிற்கு டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது உள்ளிட்ட அறிஞர்களும், வெள்ளிவிழா பொதுக் கூட்டத்திற்கு திரு.நல்லக்கண்ணு
உள்ளிட்டோர்களும் ழைக்கப்படஉள்ளனர்.

உலகமெங்கும் வாழும் தோப்புத்துறைவாசிகளும், MSF செயல் வீரர்களும் ஒன்று கூடி திருவிழாவாக இந்நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக