குட்டித் தூக்கம் போட்டால் சூப்பர் ஐடியா கிடைக்குமாம்

நியுயார்க்:ஹப் ஸ்பாட் என்ற பிரபல சாப்ட்வேர் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரைன் ஹாலிகன். இவர் நியுயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:பொதுவாக நான் சாதாரணமான வேலைகளைத் தான் செய்வேன். ஆனால் மாதத்தில்
இருமுறையாவது அருமையான ஐடியாக்கள் எனக்கு உதிக்கும். நான் தூங்கப் போகும்போதும், தூக்கத்தில் இருந்து விழிக்கும்போதும், சனிக்கிழமை அதிகாலை நடைபயிற்சியின் போதும் அருமையான நல்ல ஐடியாக்கள் வருகிறது. 



இது தொடர்ந்து நடக்கிறது.என்னைப் போலவே என் ஊழியர்களும் புதுப்புது ஐடியாக்களை சொல்ல வேண்டும் என விரும்பினேன். அவர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் கட்டில், மெத்தை போட்டு, தூங்கும் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். அவர்களை அவ்வப்போது குட்டித் தூக்கம் போடும்படி ஊக்கப்படுத்துகிறேன். இப்படி தூங்குவதால் அவர்களுக்கும் அருமையான ஐடியாக்கள் வருகின்றன என்று கூறியுள்ளார்.

Courtesy:Dhinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக