தோப்புத்துறையில் வறண்டு கிடக்கும் ஏரி

                                                                                                          (படம்:A.முகமது சகீல்)




                                                                                                 
தோப்புத்துறையின் நீராதாரங்களில் ஒன்று மேற்கில் அமைந்திருக்கும் அழகான ஏரி!
காவிரியின் கிளை ஆறு,திருத்துறைப்பூண்டி-கட்டிமேடு
வழியாக கரியாப்பட்டினம் வழியாக சிறு கால்வாயாக மாறுகிறது.
அதன் வழியே வரும் உபரி நீர் இந்த ஏரியில் தேங்குகிறது.இந்த ஏரி அக்டோபர் -நவம்பர் மாத மழையில் நிறைந்து வழியும்.
இதன் வழியாக நீர் கால்வாய் வழியே  தேத்தாகுடியை கடந்து பெரியகுத்தகையை ஒட்டி ஓடும் உப்பாற்றில் கலந்து கடலுக்கு சென்றுவிடும்.
இந்த ஏரியில் 6 மாதம் தண்ணீர் கிடக்கும் தோப்புதுறையில் நிலத்தடி நீரை இந்த ஏரி பாதுகாக்கிறது 
இந்த வருடம் (2013) போதிய மழை இல்லாததால் ஏரி அரை குறை நீர் தேக்கங்களோடு பரிதாபமாக காட்சி அளிக்கிறது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக