தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் குடும்ப தின விழா


சிங்கப்பூர்: தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் குடும்ப தின விழா கடந்த 07.04.2013(ஞாயிற்றுகிழமை) ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோப்புத்துறை வாசிகள் தங்கள் குடும்பதோடு கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட பல விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. அறுசுவை உணவுடன் போட்டிகளில் கலந்து கொண்டோருக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஊக்குவித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அதிஷ்ட குலுக்கல் நடைபெற்று மின் சாதன பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை தோப்புத்துறை முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
நன்றி

இமாம்.ஷாகுல் ஹமீது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக